Wednesday, June 20, 2012

ஒரு குடிமகனின் புலம்பல்......


என் அருமை இந்திய குடிமகன்களே..... கோட்டர் க்கு வழி இல்லாமல் கட்டிங் காக கூட்டனி வைத்து இருக்கும் இந்திய குடிமகன்களே, மழையை காரணம் காட்டி ரம் அடிக்கும் நண்பர்களே.... வெயிலை காரணம் காட்டி பீர் அடிக்கும் தோழர்கேளே ஒரு வாட்டர் பாக்கெட்டில் கோட்டர் அடித்து தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வாராமல் தடுக்கும் தமிழ்நாட்டு இன் தன்மான சிங்கங்களே.......
உங்களுக்கெல்லாம் ஒரு கெட்ட செய்தி...... ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு.... கடைசில பீர் விலையும், கோட்டர் விலையும் ஏத்திடாங்க..... இதுவரை பொறுமையாய் இருந்தது போதும்.. பீர் போல பொங்கி எழுவோம்....

பொங்கி எழுந்து என்ன பண்ணனும்னு கேட்கரீங்களா????? போறோம் மச்சி போறோம் ..... பாண்டிச்சேரி போறோம்...... நாலு பீர் அடிக்கிறோம்..... நாற்பது தடவே உச்சா போறோம்..... தலைலே துண்ட போட்டுகிட்டு பாடி பறந்த கிளின்னு பாட்டு பாடுறோம்.... அப்படியே final touch ஆளுக்கு ரெண்டு பீர் போடுறோம்.... அப்படியே கிளம்பி சென்னை வரோம்........
மொதல்ல பால் விலையை கூட்டுனிங்க சரி இது எல்லாம் வீட்ல சமையல் செய்து சாப்பிடரவங்க பிரச்ன்னை.... நாம்தான் கடைல account வச்சு குடிகிறவங்க தானே நமக்கு என்னனு விட்டாச்சு...... அப்புறமா பஸ் ல டிக்கெட் விலையே கூட்டுனிங்க சரி அது பஸ்ல டிக்கெட் எடுத்து போறவங்க பிரச்ன்னை நாம்தான் பஸ்ல டிக்கெட் எடுக்க போறது இல்லைய பிறகு என்னனு விட்டாச்சு.....பெட்ரோல் விலைய கூட்டுனிங்க அதுல்லாம் பைக்ல கார்ல போறன்வங்க பிரச்ன்னை நம்மதான் லிப்ட் கேட்டு போறவங்க தானா so நமக்கு எந்த problem ம்மு இல்லன்னு நினைச்சா வச்சான்ல ஆப்பு .......

இப்படி புலம்பும் பொது ஒரு புகழ் பெற்ற வரிகள் நியாபகத்துக்கு வருகிறது..... ஹிட்லரின் நாஜி காலத்து மார்ட்டின் நிமொல்லரின் கவிதையை நினைவுகூருங்கள். “முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை. அடுத்து அவர்கள் தொழிற்சங்கக்காரர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் தொழிற்சங்கக்காரர் இல்லை. அடுத்து அவர்கள் யூதர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் யூதர் இல்லை. அப்புறம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்காகப் பேச யாரும் மீதி இல்லை.”.
என்ன வாழ்கை டா இது???? எங்கல குடிகரானு சொல்லுற இந்த உலகம்..... இந்த உலகம் எல்லாம் சேர்ந்து இந்த குடிகரானுகளே ஏமாத்துரானுங்க ஒரு கோட்டர் நா ஒரு லிட்டர் ல நாலுல ஒரு பங்கு.. அப்படினா 250 ml இருக்கனும்... அனா ஒரு கோட்டர் ல 180ml தான் இருக்கு.... சொல்லுங்க ‍‌மக்கேளே யாரு யார ஏமாத்துற?????

மாண்புமிகு அம்மா அவர்கள...... பால் விலை, மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தும் பொது தொலைகட்சியுள் வந்த சோகமாய் முகத்தை வைத்து கொண்டு.... நான் யாரிடம் போவேன்.... தமிழ்நாட்டு மக்களாகிய உங்களிடம் தான் நான் வர முடியும்... பொதுத்துறை நிறுவனகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்கும் பொது விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று கூரினர்கள்..... இப்பொழுது நான் ஒன்று கேட்கிறேன்... எந்த டாஸ்மாக் நஷ்டத்தில் போகுதுங்கோ??? கொஞ்சம் சொல்லுங்க.... எங்கள் சக குடிமகன்களை அந்த டாஸ்மாக்கு அனுப்பி வைத்து.... நஷ்டம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுர்கிறோம்......
தமிழ்நாட்டு ஏன் இந்தியாவில அதிகாமாக லாபம் சம்பாதிக்கும் ஒரே தொழில் நம்ம டாஸ்மாக் தான்.... இங்கயும் விலையேற்றம் தாங்க முடியலைங்க............ இப்படி உங்களிடம் புலம்பி கொண்டு இருப்பவன் ஒரு சாதாரண உங்களில் ஒரு குடிமகன்......
பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.