Sunday, September 30, 2012

நடு நசியும், பழுதடைந்த பேருந்தும்...


நான் (22.09.12) அன்று இரவு மதுரை வரை செல்ல இருந்தது... என்னவே கோயம்பேடு சென்று எதாவது பேருந்தில் இருக்கை கிடைக்குமா என்று பார்க்கும் பொழுது, ஒரு குளிர் சாதனா பேருந்தில் மட்டுமே இருக்கை கிடைத்தது, சரி குளிர் சாதனா பேருந்தக்கா இருந்தால் என்ன, நாம் மதுரை சென்றால் போதும் என்று பேருந்தில் ஏறி பயண சீட்டும் பெற்று கொண்டன்...

பேருந்து கிளம்பிய சிறுது நேரத்தில் எல்லாம் என்னது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து இருந்தவர் ஓட்டுனர் இருக்கை அருகே சென்று அமர்ந்து கொண்டார், சரி நமக்கும் வசதியாக போயிற்று என்று எண்ணி கொண்டு நன்றாக காலலை நிட்டி உறங்குவதற்கு எதுவாக உக்கார்ந்து கொண்டேன், சிறுது நேரத்தில் பக்கத்துக்கு இருக்கையில் உக்கார வேண்டியவர் என்னது அருகில் வந்து என்னை எழுப்பி விட்டு, அவரது பையை எடுத்து கொண்டு சென்றார், அப்பொழுதுதான் நான் கவனித்தேன், பேருந்து எதோ நடு ரோட்டில் நிற்பதை, முன்னால் இருந்தது சிறுது சிருதாக புகை வருவதை கண்டேன்.... யாரு டா பேருந்தில் புகை பிடிப்பது என்று எண்ணி கொண்டு பேருந்தை விட்டு இறங்கி பார்த்தால் என்ஜின் இல் இருந்தது புகை வந்து கொண்டு இருந்தது,


நமக்கு இருக்கும் அறைகுறை அறிவோடு டிரைவர் இடம் என்னன்னா ரடியாடேரில் தண்ணீர் இல்லையா என்று கேட்டேன், அதற்கு அவர் இல்லை தம்பி, என்ஜின்ல ஆயில் இல்லை போல் இருக்கிறது என்றார், அதற்குள் அந்த பகுதியை சார்ந்த சில நபர்கள் பேருந்து நடுரோட்டில் நிற்பதை பார்த்து வந்து விட்டார்கள், அதில் ஒருவர் மெக்கானிக் என்று கூறி கொண்டு என்ன ஆச்சு என்று கேட்க, டிரைவர் பேருந்தின் பழுதை கூற பேருந்தை இப்பொழுது இயக்க முடியாது, குறைந்தது இரண்டு மணி நேரம் வண்டியை அப்படியே நிறுத்தி என்ஜின் குளிரந்துடன் தான் திரும்பவும் ஆயில் உற்றி என்ஜின் ஐ இயக்கினால், வண்டி இயங்க வாய்ப்பு உள்ளது, அதவும் சதவிதம் கம்மி தான்.

நேரம் இரவு 11.30. இடம் செங்கல்பட்டில் இருந்தது மதுரந்தங்கம் செல்லும் வழியில் உள்ள ஒரு சிற்றூர், அந்த பகுதியை சார்ந்த மக்கள் உடனிடியாக எங்கு இருந்தோ சில செடி கொடிகளை பறித்து வந்து பேருந்தை சுற்றி வைத்து விட்டு டிரைவர் இடம், ஐயா முதலில் பேருந்தில் இருபவர்களை கிழ இறங்கி பாதுகாப்பான இடத்தில் நிற்க சொல்லுங்கள், அவர்கள் பேருந்தில் உள்ள இருப்பது ஆபத்து, இது மிகவும் மோசமான இடம், இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கும். என்று கூறி லோக்கல் போலீஸ் கும் தகவல் குடுத்தனர்.


டிரைவர் இடம், அவருது டிப்போ நம்பர் கூட இல்லை, அவரிடம் கேட்டால் இப்பொழுது தான் புதிய மொபைல் வாங்கி இருப்பதாகவும், எல்லா நம்பரும் தனது பழைய மொபைல் இல் தான் இருபதக்வும் மிகவும் சாதரணமாக கூறினார். அவர் மீது கோவம் வந்தாலும் அந்த நேரத்தில் காட்டுவது சரியான தருணம் இல்லை என்பதால் நான் ஒன்றும் கூற வில்லை. என்னது பேருந்தில் பயணம் செய்த ஒரு பெரியவர், வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்த ஒருவர், கிட்டதிட்ட டிரைவர் இடம் சண்டை போடும் அளவுக்கு பொய் விட்டார். சரி அவரை சமாதானப் படுத்தாலும் என்று அவரிடம், ஆன்னே கோவ படாதிங்க, பார்த்துக்கலாம், என்று அவரிடம் சொன்னால், அவர் இப்பொழுது ஏன் மீது கோவத்தை திருப்பி விட்டார்.

அவரை ஒரு மாதிரி சமாளித்து, பேருந்து உள்ளே சென்று எனது பேக்கை எடுத்து விட்டு, அங்கு இருந்தவர்களிடம், இதற்கு மேல் பேருந்து செல்லாது, என்னவே ஒருவர் ஒருவராக கிழ இறங்கி சாலை ஐ கடந்து சென்று நில்ல்லுங்கள் என்று கூறி, அவர்களை சாலை கடபதற்க்கு உதவி விட்டு, சாலை ஓரத்தில் நிற்கும் போதே, சாலையோர பாதுகாப்பு போலீஸ்காரர்க்கள் வந்து விட்டார்கள், அவர்கள் இங்கு என நிற்கிர்கள்?? டிரைவர் ஐ எங்கே என்று கேட்க, நான் அவரிடம் பதில் கூறி கொண்டு இருக்கும் போதே, அந்த வெள்ளை சட்டை மனிதர் அங்கும் வந்து விட்டார். வழக்கம் போல் இந்த டிரைவர்களின் கவண குறைவு தான் காரணம், அச்ச புச்ச என்று கத்த தொடங்கி விட்டார். நான் அவரிடம் அண்ணே கொஞ்சம் சமாதானமே இருங்கள், அடுதத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்போம், அதற்கு அவர், நீ வாயே முடித்து சும்மா இரு, நா யாருன்னு தெரியுமா??? நான் ஒரு முத்த பத்திரிகையாளன், தினமலரில் (தினமலம்) 31 வருடம், ஹிந்துவில் 9 வருடம் நிருபராகக இருந்தது வருகிறேன், நான் யாரிடம் வேண்டும் என்றால்லும் பேசுவேன், போலீஸ், அரல்சியல்வாதி, மினிஸ்டர் என்று யாரிடம் வேண்டும் என்றாலும் நான் பேசுவேன், நீ யாரு டா என்னக்கு அறிவுரை சொல்லே.... ஏன் கண் முன்னே நிற்காதே என்ற கத்த தொடங்கி விட்டான். நான் நினைத்து கொண்டேன் தினமலர் (தினமலம்) பத்திரிக்கை போல் தான்அதன் பத்திர்க்கையாளர்களும் இருப்பார்கள் போலும்.

நான் ஒன்று கேட்கிறேன், இதை போன்ற ஒரு அவரச காலத்தில், நின்று கொண்டு இருக்கும் பொது, எதனால, யாரால தவறு, யார் அதற்க்கு பொறுப்பு என்று விவாதம் செய்து கொல்ல அது சரியான நேரம் அன்று. அந்த இடத்தில் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். என்ன செய்தால் அங்கு இருப்பவர்கள் அனைவரையும் பத்திரமாகப் அவர்கள் செல்ல வேண்டிய இடதிற்கு போவதற்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு டிரைவர் தான் காரணம், அரசு அதிகாரிகள் இப்படி தான், முறைகேட்ட அரசாங்கம், என்று திட்டுவதால் எந்த பயனும் இல்லை. நாம் அங்கு என்ன செய்ய போகிறோம் என்பது தான் அங்கு முக்கியம்.


உள்ளூர் காரர் ஒருவோருடன் சேருந்து கொண்டு அந்த வழியாக செல்லும் பேருந்துகளை வழிமறித்து. இருக்கும் இடங்களில் எங்களுள் இருக்கும் வயதானவர்கள், பெண்களை முதலில் ஏற்றி விடலாம் என்று ஓவருவொரு பேருந்தகா கை காட்டி கொண்டு இருந்தோம். அந்த சாலை இரவு நேரத்தில் மிகவும் போகுவரத்து நெரிச்சல் மிகுந்தாக இருந்தது, லாரி, டேங்கர் லாரி, ஆம்னி பஸ் என்று மிகவும் பிஸி வாகவே இருந்தது. எங்களுடன் பெண்கள், கை குழந்தைகள் என்று ஒரு பெரிய குட்டமே இருந்தது. நாங்கள் கை காட்டி நிறுத்திய முதல் பேருந்தில் முதல ஆளாக ஏறியது வேறு யாரும் இல்லை. அந்த வெள்ளை சட்டை காரன் தான். அவன் உண்மையில் மக்கள் மீது அக்கறை உள்ள பத்திரிகை காரனாக இருந்தால் எங்களுடன் நின்று பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்புவதற்கு உதவி செய்து கொண்டு இருந்தது இருக்கே வேண்டும், ஆனால் அவன் அப்படி இல்லை.

அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கு வந்து விட்டார். அவர் வந்து சத்தம் போடவும், அதற்குள் எங்கு இருந்தோ பஸ் டிப்போ நம்பர் வாங்கி தகவல் குடுத்து விட்டார் நமது டிரைவர். ஐயா ஒரு புதிய பேருந்து சென்னையில் இருந்தது கிளம்பி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்து விட்டும் என்றார். நாங்கள் அந்த இடத்திற்கு வரவே இரண்டுஅரை மணிநேரம் அச்சு. அதில் இருந்தது சிறுது நேரத்தில் காவல் துறையும் சென்று விட்டது. இரண்டு கான்ஸ்டபள் மட்டும் காவல் வண்டியில் குறட்டை விட ஆரம்பித்து விட்டார்.

எங்களுடன் பணியில், நடு இரவில், நடு ரோட்டில் இருந்த கை குழந்தைகளுடன் இருக்கும் பெண்களை பார்த்தால் எங்களுக்கு பாவமாக இருந்தது. சரி அவர் சொன்னா பேருந்து வருவது வரை காத்து இருந்தால் கதைக்கு ஆகாது.... என்னவே உள்ளூர் நபர்களுடன் சேருந்து திரும்பவும் வருகிற அரசு பேருந்துகளை கை காட்டினோம், ஒருவர், இருவராக கிடைக்கும் பேருந்தில் ஏற்றி விட்டு கொண்டு இருக்கும் பொது, எங்கள் பேருந்தில் பயணம் செய்த சக குடிமகன், எங்களிடம் வந்து ஏய் நெ யாரு, நீ எதுக்காக பேருந்தை நிப்பாட்டுகிறாய், நான் பயண சிட்டு வாங்கியது குளிர் சாதனா பேருந்தில், சாதாரண் பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடியாது, அதான் கண்டக்டர் கூறினர ஒரு பேருந்து வருகிறது என்று அது வருவது வரை யாரும் எங்கும் செல்ல வேண்டாம். எல்லாரும் இங்கைய நிற்போம் என்று எங்களிடம் வம்புக்கு வந்தார், அவனிடம் கேட்டோம் ஐயா நீங்கள் தனியாக வந்து இருகிர்ர்களா இல்லை பெண்களுடன்வந்து இருகிர்ர்களா என்று??? ஏன் என்றால் பெண்களுடன் வந்து இருந்தால் அவர்களுது பாதுகாப்பு தான் முக்கியம். என்று கிடைக்கும் பேருந்தில் ஏறி கிளம்பி விடுவான். ஆனால் தனியாக வந்தால் அந்து பிரச்சினை கிடையாது. அதற்கு அவன் பெண்களுடன் தான் வந்து இருக்கிறேன் என்றான். அதற்க்கு என்னுடன் கூட இருந்த உள்ளூர் வாசி, ஐயா அப்படி என்றால் சற்று தள்ளி இருங்கள், பேருந்து வந்த உடன் உங்களை ஏற்றி விடுகிறோம், அது வரை பொறுமையாக இருங்கள். என்று கூறி விட்டு. திரும்பவும் கை காட்ட தோங்கினோம். ஆனால் அந்த குடிமகன் உடன் எந்த பெண்ணும் வரவில்லை. எபப்டி தான் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையிலும் நான் எடுத்தது குளிர் சாதனா பேருந்துக்கு பயண சிட்டு பெற்று கொண்டு, சாதாரண பேருந்தில் செல்ல மாட்டேன் என்று கூருகிறான்????


எனக்கு இந்த இடத்தில் அன்பே சிவம் படத்தில், கமல்கும் மாதவனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையோடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
மாதவன்: பணம் இருந்தாலும் வசதி கிடைக்காத ஒரே நாடு இந்தியா தான்.
கமல்: பணம் இருப்பவர்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று என்னும் வரையில் இந்தியா இப்படிதான்

அப்பொழுது அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏம்பா தம்பிநீ போகலியா என்று கேட்டார். இல்ல சார். நான் தனி ஆள் தான், நான் கடைசியாக போகிறேன், முதலில் இங்கு இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி விட்டால் பிறக்கு நிம்மதியாக போகலாம் சார், என்றேன். அதற்கு அவர் என்னக்கு கை குடுத்து, நன்றி நண்பா... என்று கூறினார்.

கிட்ட திட்ட எல்லாரயும் வந்த பேருந்தில் ஏற்றி விட்டாச்சு, இன்னுமும் இரண்டு குடும்பம் மட்டும் ஒரு ஜோடி மட்டும் தான் பாக்கி, அப்பொழுது ஒரு பேருந்தில் ஒரே ஒரு சிட்டு மட்டும் தான் பாக்கி இருந்தது, என்னுடன் இருந்தவர்கள் தம்பி நிங்க போங்கப்பா.... நாங்க மற்றவர்களை பார்த்து அனுப்பி வைக்கிறோம் என்று கூறிய பின்னேர நான் அந்த பேருந்தில் ஏறினேன்... அப்பொழுதும் நாங்கள் வந்த பேருந்தின் டிரைவர் பழுது அடைந்த பேருந்தின் பின் புறம நின்று கொண்டு எல்லா வண்டிகளும் விலகி செல்லுமாறு கை அசைத்து நடு ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். உண்மையில் அவரை பாராட்ட வேண்டும் என்று என்னது மனம் கூறியது.

திருச்சியை தாண்டி ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தினார் நான் வந்த பேருந்தின் டிரைவர், அங்கு சிறுது நேரத்தில் எங்களுக்கு பின்பு இரண்டு குளிர் சாதனா பேருந்து வந்தது. அதில் அந்த இரண்டு குடும்பமும் அதில் பத்திரமாக வந்து இருந்தார்கள். முதலில் பார்த்தது அந்த குடிமகனை தான், சரி அவரிடம் சென்று விசாரிக்கலாம் என்று அவரிடம் என்ன அண்ணே பஸ் எல்லாம் சய்கரியமாக இருக்கிறதா என்று கேட்டன. ம்ம இருக்கு என்று கூறி விட்டு சென்று விட்டார். ஆனால் அந்த இரண்டு குடும்பத்தை சேருந்த ஆண்களும் என்னை பார்த்த உடன், ஒரு நட்பு புன்னகையுடன், தம்பி நாங்கள் இந்த பேருந்தில் தான் வந்தோம், உங்களுக்கு எப்படி சய்கரியமாக இருக்கிறதா என்று விசாரித்து விட்டு தான் சென்றார்கள்.

அவர்களுக்கு கடைசி வரை ஏன் பெயர் கூட தெரியாது. பெயரில் என்ன இருக்கிறது... அவர்களுள் ஒருவனாக நின்று அவர்களின் கஷ்டத்தை கடைசிவரை இருந்தது பார்த்து விட்டு, அவர்களுக்கு முடிந்தவரை பாதுக்காப்பாக பார்த்து கொண்டு இருத்த சாதாரண சாமானியன். நான் வேறு யாரும் இல்லை, உங்களோடு ஒருவனாக இருந்தது தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகளை பார்த்து கொண்டும்அதை திர்க்க பாடுபடும் உங்களுள் ஒருவன்.

சென்னையில் குளிர் சாதன பேருந்தில் ஏறி, சாதாரண பேருந்தில் கடைசி சீட்டில் பயணம் செய்து மதுரையில் இறங்கி இருக்கிறேன். என்ன கொடுமை சார் இது??????

4 comments:

Unknown said...

elaam ok.. ne first ticket eduthiya antha AC busla...

உங்களுள் ஒருவன் said...

நண்பரே நான் government bus la ticket எடுப்பவன் கேனையன்.. என்றே பதிவு எழுதியதும் நான் தான்... ஆனால் இது நெடும் தொலைவு பயணம் என்பதால் வேறு வழி இல்லாமல் பயணசீட்டு பெற்று கொண்டேன்...

கோவை நேரம் said...

நல்லது நண்பரே...உங்களை பாராட்டுகிறேன்...

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்லதொரு பதிவு! வாழ்த்துகள்!

Post a Comment