Tuesday, September 04, 2012

Postmortem செய்யும் அரசு அதிகாரிகள்....

உன்னை போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசன் சொல்லுவது போல் வயற்றில் குண்டு வைத்த ஒருவன் வெடித்து விட்டால் .... உடனே அனைவரின் வைறு பகுதியும் சோதனை செய்து விட்டு.... காலில் குன்டோடு வருபவனை விட்டு விடுவார்கள்.....

அதை போல் தான் நமது தமிழக அரசு மட்டும் அல்ல அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள்..

சிறிது நாட்களுக்கு முன்பு பள்ளி பேருந்தில் பயணம் செய்த சுருதி என்ற சிறுமி பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிர் இழந்தால்... அதில் இருந்து சரியாக முன்றாவது நாளில் சுஜிதா என்ற சிறுமி பேருந்தில் இருந்து இறங்கும் பொது டிரைவரின் கவன குறைவால் அந்த சிறுமி இறங்குவதற்கு முன்பே பேருந்தை எடுக்க பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில்லையே சிறுமி பலி...

உச்ச நீதிமன்றத்தின் சவுக்கடி கேள்விக்கு பின் தமிழக அரசு உடனடியாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளுக்கும் உடனடியாகக FC (Fitness Certificate) சில ஆயிரங்களுக்கு குடுக்கவும் பட்டது.. இப்பொழுது FC ஆ அப்படினா என்னனு இப்போ கேட்கிறாங்க...

சிறிது நாட்களுக்கு முன்பு பள்ளிக்குட நிச்சல் குளத்தில் ஒரு மாணவன் பலி ஆன சம்பவம்... அப்பொழுதும் சிறுது நாட்களுக்கு அதை பற்றி தான் பேச்சு.... பேருந்தில் பலி ஆன சிறுமிக்கு கிடைத்த நியாயம் கூட இந்த மாணவனுக்கு கிடைக்க வில்லை... ஏன் என்றால் அந்த பள்ளி குட நிர்வாகி ஆதிமுக வில் பெரிய ஆள்... அந்த வழக்கு அப்படியே பின்னுக்கு தள்ளப்பட்டது...

இப்பொழுது மீண்டும் சென்னையில் உள்ள அரசு மருத்தவமனையில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அரசு மருத்வமனைகே உரித்தான சுகாதார கேடு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு... ஆகிய பல்வேறு காரணகளால்

சொன்னால் வேட்கே கேடு... ஒரு குழந்தையை மருத்துவமனையில் வைத்து இருக்கும் லேட்சணம் _______

ஒரு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை ICU Ward இல் வைத்து இருந்த லட்சணம்....எலி கடித்து அந்த குழந்தை இறந்து விட்ட செய்தி கிட்டதிட்ட எல்லா செய்தி தொலைகாட்சி மற்றும் தினசரிகளிலும் வந்தது. அனைவரும் அறிந்தது தான். ஆனால் அதன் பிறகு நடந்துதான் உச்சகட்ட காமெடி..

நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள்.... அவர்களுது கட்சி ஆட்கள் போல் கூற வேண்டும் என்றால் இந்த பதிவு முழுக்க அம்மாவின் அடைமொழி மட்டுமே சொல்ல வேண்டும். ICU Wardஇல் ஒரு குழந்தையை எலி கடித்து இறந்தால் என்ன காரணம்.. அங்கு சுகதார கேடு இருக்கிறது அதனால் தான் எலி வருகிறது. அங்கு எப்படி சுகாதார கேடு ஏற்பட்டது??? பக்கத்தில் ஒரு கையேந்தி பவன் இருக்கிறது அங்கு அனைவரும் சாப்பிட்டுவிட்டு அந்த உணவு கழிவுகளை அப்படியே போட்டு இருப்பதால் தான் இந்த சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது என்று தனது ஞானம் திருஷ்டி இல் கண்டு பிடித்து தன் பயனாக உடனடியாகக் ரோடோர உணவு விடுதிகள் அன்னத்தையும் அகற்றி விட்டு இன்னி அரசு மருத்துவமனையில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் மருத்தவமனை உணவு விடுதியுள் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டுமாம்.... அம்மா நீங்க great மா... நீங்க மணிக்கு ஒருமுறை நீங்கள் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து கொண்டே இருகிரிக்கள்....


அரசு மருத்துவமனைக்கு யார் வருவார்கள், வறுமை கோட்டிற்கு கிழே இருபவர்களும், முடியாதவர்களும், அவர்களின் வசதிக்கு ஏற்ப எதோ முடிந்ததை வாங்கி தனது பசியை போக்கிகொள்கிரர்கள்... சொல்ல போனால் அரசு மருத்தவமனை உணவு விடுதியை விட ஆயிரம் மடங்கு நன்று சாலையோர கையேந்தி பவன்கள்.... அவர்கள் உணவில் இருக்கும் சுவை, சுகாதாரம், சில உயர்தர உணவு விடுதியுள் கூட கிடைப்பது இல்லை, ஏன் என்றால் சென்னையில் பல தரப்பட்ட உணவு விடுதியுள் சாப்பிட்ட அனுபவம் தான்.

அம்மா சாலையோர உணவு விடுதிகளால் சுகாதார கேடு அறவே கிடையாது.. சுகாதார கேடு எப்போது ஏற்படுகின்றது என்றால் நடு ரோட்டில் கிடக்கும் குப்பைகளை அகற்றாமல், சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றுகிறேன் என்ற பெயரில் அதை ஊர் முழுவதும் தெளித்து விட்டு செல்லும் நமது கார்ப்ரேஷன் தான். முதலில் அரசு மருத்துவமனையில் நோயாளிககளுக்கு போதிய வசதிகள் கிடையாது, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் தனக்கு ஏன சொந்தமாக ஒரு கிளினிக் வைத்து கொண்டு.. அங்கு வர சொல்லி பணம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய மருந்த்கள் கூட கையிருப்பு இருப்பது இல்லை... என்னது சின்ன வயதில் ஒரு முறை ஆற்றில் குளிக்கும் பொது உடைந்த பாட்டில் காலில் கிழித்து ரத்தம் வந்து கொண்டு இருந்தது.. அப்பொழுது பக்கத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றேன். அங்கு மருத்துவரோ, நர்ஸ் என்று யாரும் இல்லை, வார்டு பாய் என்று அழைக்க படும் ஒருவர் மட்டுமே இருந்தார், அவர் என்னிடம் கூறினார், மயக்க மருந்து இல்லை கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள் என்று கூறி என்னது காலில் ஐந்து தையல் போட்டார்.. என்னது விதியை நினைத்து சிரித்து கொண்டு அந்த வலியையும் ஏற்று கொண்டேன்.

இந்த லேட்சனத்தில் தான் இருக்கிறது நமது அரசு மருத்துவமனைகள், அந்த குழந்தை இறந்ததற்கு யாறுடைய கவனகுரைய்வு, அலட்சியம் அன்று கண்டுபிடித்து அவர்களைபணியை விட்டு நிக்காமல் எலிகளை பிடிக்க இந்த அம்மா உத்தரவு போட்டு கொண்டு இருக்கிறது.

அம்மா உங்களுது ஆணவத்தால் புதிய தலைமை செயலகம், கிழக்கு ஆசியாவில் மிக பெரிய நூலகம் ஆகிய வற்றை மருதுவனையாக மாற்ற முயலாமல் ஏற்கெனவே இருக்கும் மருத்துவமனைகளை சுகாதாரத்தை மேம்படுதுவும், போதிய மருத்துவ வசதிகள் பெருக்கவும் முயற்சிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதைவிட்டுவிட்டு எலி பிடிக்க ஆட்களை போடுவது நன்றக்கவா இருக்கிறது???

இந்த விஷயத்தை பத்தி எந்தன் முந்திய பதிவு.

“Prevention is better then cure.” வருமுன்னே காப்பது தான் சால சிறந்தது, அதை விட்டுவிட்டு இது போன்றே சம்பவும் நடந்த பிறக்கு உடன் நடவடிக்கை எடுப்பது சரியன்று, அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அதை பழக்கமாகி அடுத்த முறை அப்படி ஒரு சம்பவும் நடக்காமல் பார்த்து கொண்டால் அது பாராட்ட கூறியது, ஆனால் நமது ஆட்கள் கொஞ்ச நாட்கள் மட்டும் செய்து விட்டு பிறக்கு அப்படி ஒரு சட்டம் போட்டார்களா என்று நம்மையே திரும்பி கேட்கிறார்கள், அப்படி மழை நீர் சேகரிப்பு திட்டம் போட்டார்களோ அப்படி தான், இப்பொழுதும் நடகிறது.

இப்படி இந்த சமுகத்தில் நடக்கும் அவலங்களை பார்த்து சகித்து கொண்டு இருக்காமல் உங்களிடம் புலம்பி தள்ளும், நான் வேறு யாரும் இல்லை, உங்களுள் ஒருவன் தான்.

5 comments:

கோவை நேரம் said...

நம்ம நாட்டோட அரசியல் லட்சணம் இதுதான்...ஏழைகளுக்கு என்று எப்போது செயல்பட ஆரம்பிக்கிறார்களோ அப்போது தான் தலைவிதியும் மாறும்...

Unknown said...

உங்கள் புலம்பலில் என்னையும் சேர்த்து கொள்கிறேன். இதே போல் சிவகாசி பட்டாசு குடோன் வெடித்து அரசு கணக்கின் படி 36 பேர் செய்தி சேனல்களின் படி 56 பேர் எது எப்படி இருந்தாலும் இதற்கு காரணம் விதிமுறை மீறல்களும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் தான் ( தனியாக இதற்கு ஒரு பதிவு எழுத வேண்டும் என் முகவரி tradersanbu.blogspot.in

உங்களுள் ஒருவன் said...

அன்பு மற்றும் கோவை நேரம்... பின்னோட்டம் குடுத்ததுக்கு நன்றி....

உங்களுள் ஒருவன் said...

@அன்பு பிரியா: இந்த புலம்பல் இதோடு நிற்காது... சென்று கொண்டே தான் இருக்கும்..... இந்த உலகம் எங்க செல்கிறது???? என்ற கேள்வி போல்....

சதீஷ் செல்லதுரை said...

கூடவே உள்ளே விளையாடும் லஞ்சம்?நான் மூன்ற நாள் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்தேன்...மிக கஷ்டம்.பணம் கொடுத்தால் சரியாக கட்டு போடுவதும் இல்லையென்றால் ஏனோ தானோ என்றும்......அரசு ஆபரேசன் தியேட்டரில் இருந்து வார்ட் வரை ஸ்ட்ரெச்சரில் பயணிப்பதுதான் உலகிலேயே அதிக பட்ச்ச கட்டணத்தில் பயணிக்கும் பயணமாகும்.என்று விடியும்?

Post a Comment